சென்ற வார ஏற்றுமதி உலகம் 21
சேதுராமன் சாத்தப்பன்
பூடான் நாட்டிற்கு ஏற்றுமதி
பூட்டான் போன்ற பக்கத்து நாடுகள் அவர்களுடைய தினசரி தேவைகளுக்கு கூட நம்மையே சார்ந்திருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பிரச்சனை. என்னவென்றால் தூரம் தான். கெல்கத்தாவிற்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து பெரும்பாலான பொருட்கள் சென்று விடுகின்றன. ஆனால், நீங்கள் ஒரு முறை சென்று வந்தால் அங்கு என்னென்ன பொருட்கள் விரும்பி வாங்கப்படுகின்றன, என்ன விலைக்கு விற்கிறார்கள். அதன் இந்திய மதிப்பு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஏற்றுமதி செய்வதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம். அழகு பிரதெசம், குளிர் அதிகம், மக்கள் அங்கு ஆங்கிலம், இந்தி சரளமாக பேசுகின்றனர், பூடான் ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பிறகு சமம். இது போல நமக்கு சாதகமாக உள்ள இடங்கள் அந்தமான் (போர்ட்பிளயர்), மாலத்தீவுகள் போன்றவை ஆகும். அங்கும் சென்று அழகையும் ரசித்து, வியாபரமும் செய்து வரலாம். மாலத் தீவுகளுக்கு செய்யப்படுவது ஏற்றுமதியாக கருதப்படும், ஆனால் அந்தமான் இந்தியாவின் பகுதியாக இருப்பதால் அங்கு விற்பது ஏற்றுமதியாக கருதப்படாது. ஆனால், அங்கு தமிழர்கள் அதிகம் இருப்பதால் வியாபார வாய்ப்புக்கள் அதிகம். அங்கு அருமையான மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. அங்கிருந்து மீன் முதலியவற்றை இறக்குமதி செய்யவும் முயற்சிக்கலாம்.
தங்கம், வைரம் ஏற்றுமதி
இந்தியா உலகத்தில் அதிக அளவில் தங்கம், வைரம் இறக்குமதி செய்பவர்கள். அப்படி இறக்குமதி செய்யும் தங்கம், வைரம் எல்லாம் இங்கே உபயோகப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. ஏனெனில் பெருமளவு அவை ஆபரணமாக செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு மாதத்திற்கு கிட்டதட்ட 17000 முதல்18000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள ஆபரணப் பொருட்களை ஏற்றும்தி செய்கிறோம். வாங்குபவர்கள் யார்? வளைகுடா நாடுகள், ஹாங்காங், அமெரிக்கா முக்கியமானவை. புதிய மார்க்கெட்டுக்கள் என்று எடுத்துக் கொண்டால் ரஷ்யா, சீனா, ஐரோப்பா ஆகும்.
பழங்கள், காய்கறிகள் இறக்குமதி
பழங்கள், காய்கறிகள் பாகிஸ் தானில் இருந்து வருடத்திற்கு 10000 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதியும் செய்கிறோம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை.
குறிப்பாக மாம்பழம் போன்றவைகளை இரண்டு நாடுகளும் கூட்டாக சேர்ந்து செய்தால் உலகளவில் நல்ல வாய்ப்புக்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் மாம்பழ சீசன் மார்ச் முதல் ஜுன் வரை உள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் ஜுன் முதல் அக்டோபர் வரை உள்ளது. கூட்டாக செய்யும் போது உலகளவில் 9 மாதங்களுக்கு மாம்பழம் விற்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கருதப்படுகிறது. இதிலாவது கூட்டாக இருக்கலாமே?
காட்டன் ஏற்றுமதி
காட்டன் ஏற்றுமதி வரும் வருடத்தில் 8 மில்லியன் பேல்களாக இருக்கும். இது இந்த வருட ஏற்றுமதியை விட 1 மில்லியன் பேல்கள் கூடுதலாக இருக்கும். இந்த கூடுதல் ஏற்றுமதி வாய்ப்புக்களுக்கு காரணம் சீனாவின் இறக்குமதி தான். ஒரு கிலோ ரூபாய் 170 வரை செல்கிறது.
25 வகை தேன்
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் 25 வகை தேன்கள் சமீபத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் நடந்த இண்டர்நேஷனல் டிரேட் பேரில் நாவற்பழ தேன், நெல்லிக்காய் மிட்டாய்கள் போன்றவற்றிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தது. ஏனெனில் உலகளவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் இந்தியாவில் இருக்கிறார்கள். அதற்கு நெல்லிக்காய், நாவற்பழம் போன்றவை அருமருந்தாகும்.
நாவற்பழ தேன் நாவற்பழ மரத்தில் தேன் கூடு வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் தேன் ஆகும். இது பற்றி அறிய விபிஸ நேச்சுரல் பீ பார்ம் என்ற கம்பெனியை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வார இணையதளம்http://www.ecgc.in/
உலகளவில் பல நாடுகளில் ஏற்றுமதி கியாரண்டி கார்ப்பரேஷன்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகமாகும். இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான பல உபயோகமான தகவல்கள் உள்ளது. புதிய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த கடன் உத்திரவாத கழகம் ஒரு வரப்பிரசாதமாகும்.
கேள்விக்கு என்ன பதில்?
ரவிக்குமார்
திண்டுக்கல
அய்யா என் பெயர் ரவிகுமார் நான் திண்டுக்கல் லிருந்து மெயில் அனுப்புகிறேன். நான் ஏற்றுமதி செய்வதற்கு மிக ஆர்வமாக உள்ளேன், நான் கடந்த ஆண்டு IE CODE வாங்கிவிட்டேன். இறக்குமதியாளர்களை கண்டு பிடிக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எனது நோக்கம் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்து சிறந்த ஏற்றுமதியாளர் ஆக வேண்டும் . எனது ஊரை சுற்றி ஏற்றுமதி செய்வதற்கு நிறைய பொருட்கள் உள்ளன (ஒட்டன்சத்திரம் -காய்கறிகள் , சிறுமலை -பழங்கள் , நத்தம் -புளி, மாங்காய் , கரூர் -துணிகள் , நிலக்கோட்டை -பூக்கள் ). அகவே இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய இறக்குமதியாளர்களை அறிந்து கொள்வதற்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
பதில்
இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி:
1 உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வரவேற்பு இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.
2 அந்த நாட்டில் அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் சிறிய / பெரிய இறக்குமதியாளர்களை கண்டுபிடியுங்கள்.
3 இதற்கு அங்குள்ள எல்லோ பேஜஸ் / இணைய தளங்கள் ஆகியவற்றை தொடர்பு கொண்டு வாங்குபவர் முகவரி கண்டுபிடியுங்கள். உங்கள் உறவினர் / நண்பர்களும் உதவலாம்.
4 பின் அவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
5 பின்னர் அந்த இறக்குமதியாளரை பற்றி விசாரித்து ஏற்றுமதி செய்யுங்கள்.
6 சில பொருட்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள். நிறைய பொருட்களை எடுத்து கொள்ளாதீர்கள்
இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gamil.com

தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறு தொடரட்டும்
ReplyDeleteஅறிவு பெற ,தேவையான செல்வம் சேர நல்ல வழிகாட்டி.
ReplyDeleteதங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
ReplyDeleteதினமலரில் தாங்கள் எழுதும் வர்த்தகம் பகுதி மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது... இந்தியாவின் பொருளாதாரம் குறித்து நிறைய பல அரிய விஷயங்களை தெரிந்து கொண்டேன்...மிக்க நன்றி...தங்களின் பணியை மேலும் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...
ReplyDelete