Saturday, June 30, 2012

இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி


இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி

இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் நடைபெறுகிறது. இதில் மஹாராஷ்டிராவின் பங்கு 55 சதவீதம் ஆகும்.


Thursday, June 28, 2012

விவசாய விளைபொருட்களுக்கு தனி டிரெயின்


விவசாய விளைபொருட்களுக்கு  தனி  டிரெயின்

விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்த பின் சந்தைகளை சரியான சமயத்தில் சென்றடைய வேண்டும். இல்லாவிடில் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதற்காக விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஒரு தனி டிரெயின் நாசிக்கிலிருந்து கொல்கத்தா புறப்பட்டது. இது ரயில்வே பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஒரு அறிவிப்பு தான். கத்திரிக்காய் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கலாம். நாசிக்கிலிருந்து செல்வதால் வெங்காயம் எக்ஸ்பிரஸ் என்றும் வைக்கலாம்.

வைரம் ஏற்றுமதி மின்னுமா?


வைரம் ஏற்றுமதி மின்னுமா?

இந்தியாவிலிருந்து பட்டை தீட்டிய வைரம் ஏற்றுமதி மே மாதத்தில் சென்ற வருடம் மே மாதத்தை விட 50 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்த தொழிலில் இருப்பவர்களை ஒரு கிலியை கொடுத்துள்ளது. வைரம் ஏற்றுமதிக்கு 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது தான் இந்த ஏற்றுமதி சரிவுக்கு காரணம் ஆகும்.

Tuesday, June 26, 2012

ஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள்


ஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்வதற்கு 700 விவசாயிகளை அந்த மாநிலம் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் விளைவிக்கும் காய்கறிகள் அங்கு ஏற்றுமதி செய்யப்படும். கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், பாகற்காய், முருங்கைகாய், கறிவேப்பிலை ஆகியவை ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். இந்த 6 காய்கறிகள் தாம் இந்தியாவின் மொத்த காய்கறி ஏற்றுமதியில் 80 சதவீதம் பங்களிக்கின்றன.

Sunday, June 24, 2012

இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு


இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு

மாம்பழ சீசன் முடியப்போகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாம்பழங்களின் கதைகள் இன்னும் நின்றபாடில்லை. 
அமெரிக்காவிற்கு செல்லும் மாம்பழங்கள் இராடியேஷன் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முன்பே பார்த்தோம். அப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று சான்றிதழ் அளிக்க அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் இந்தியா வந்து 21 நாட்கள் தங்கி அளித்து சென்றிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க டாலர்கள் 85000 செலவு ஆகியுள்ளது. இது மாம்பழம் விலையைக் கூட்டும் அல்லது லாபத்தை குறைக்கும். ஆதலால் அமெரிக்க அதிகாரிகள் வரவேண்டாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனிப்பான மாம்பழத்திற்குள் இவ்வளவு செய்திகள்.


கொசுறாக ஒரு செய்தி இந்தியாவில் தற்போது குஜராத்தில் ஆண்டு முழுவதும் மாம்பழம் உற்பத்தி செய்யும் முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். மாம்பழ சீசன் என்று ஏங்கி கொண்டு இனி இருக்க வேண்டாம். ஆப்பிள் போல ஆண்டு முழுவதும் சாப்பிடலாம், அப்படியே சாப்பிடலாம். இது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.

Friday, June 22, 2012

பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு


பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு 

உலகளவில் அதிகம் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், வாழை, மாம்பழம் இன்னும் சில பழங்கள் ஆகியவை உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், உற்பத்தி செய்யும் பழங்களில் சுமார் 40 சதவீதம் விற்பனைக்கு செல்லும் முன்பே அழுகிவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நமது கோவை வேளான் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்ததன் பலன், இன்னும் சில வருடங்களில் நமக்கு உதவும். கனடாவின் கயல்ப் யுனிவர்சிட்டியும் கண்டுபிடித்த ஹெக்சானேல் என்று ஒருவித கெமிக்கலும், கோவை வேளான் பல்கலைக்கழக விஞ்ஞானி கண்டுபிடித்த நானோ பிலிமும் இணைந்து பாக்கிங் செய்து அனுப்பும் போது பழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது. இது 30 சதவீதம் பழங்கள் கெடாமல் இருக்க வழிவகை செய்கிறது. இது நமது ஏற்றுமதிக்கு பெரிதும் உதவும்.

Thursday, June 21, 2012

இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம்


இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம்

இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம் தற்போது வருடத்திற்கு 20 பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது சுமார் 110,000 கோடி ரூபாய்கள். இது 2015ம் வருடத்தில் 45 பில்லியன் டாலராக கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (சுமார் 252,000 கோடி ரூபாய்கள்). 
மேலும், 2020ம் வருடத்தில் இந்தோனேஷியாவில் அதிக அளவு முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா முதலாவதாக இருக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? வர்த்தகத்திற்கு ஏற்ற நாடு என்று. இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதியானாலும், இறக்குமதி அதிக அளவில் நிலக்கரி, கச்சா பாமாயில், வெட்டப்பட்ட மரம், ரப்பர், பர்னிச்சர் ஆகியவை செய்யப்படுகிறது.