Thursday, March 22, 2012

ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்கள்

ஜெம் அண்ட் ஜுவல்லரி, பினிஷ்ட் லெதர், எலக்ட்ரானிக் சாமான்கள், மெரைன் ப்ராடக்ட்ஸ், இயற்கை சில்க் யார்ன், காட்டன் யார்ன் பேப்ரிக்ஸ், மேட் அப்ஸ், பிளாஸ்டிக்  பொருட்கள். வருடத்திற்கு 7000 முதல் 8000 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாகிறது. இதில் பெரும்பகுதி ஜெம் அண்ட் ஜுவல்லரி ஆகும்.

Tuesday, March 20, 2012

கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க

கிரீன் டீ தற்போது ஒரு பெரிய பிசினஸ வாய்ப்பாகிவிட்டது. மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் இந்தியா அளவில் கிரீன் டீ குடிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கிரீன் டீ குடிப்பவர்கள் இந்தியாவில் வருடந்தோறும் 10 சதவீதம் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்தியா உலகளவில் இரண்டாவது டீ உற்பத்தி செய்யும் நாடு. வருடந்தோறும் 9 முதல் 11 மில்லியன் கிலோக்கள் கிரீன் டீயும் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகின்றன. சைனா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு சென்றிந்தால் பார்த்திருக்கலாம். அங்கு ஹோட்டல்களில் கிரீன் டீ என்பது ஒரு பிரதன பானமாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ சீனக்காரர்களில் குண்டானவர்களையே பார்க்கமுடிவதில்லை. மேலும் உணவில் தினாரி மாமிசம் எடுத்துக் கொண்டாலும் அது அவர்களை பாதிப்பதில்லை. நாயர் ஒரு கிரீன் டீ போடுங்க என்று வருங்காலங்களில் டீக்கடைகளில் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.




மதுரை மல்லி

மதுரை என்றால் மல்லிக்கைப்பூவை யாரும் மறக்கமாட்டார்கள். உலகளவில் பிரசித்தி பெற்றது மதுரை மல்லி. அந்த மல்லிகைப்பூவை உலகளவில் ஒரு பிராண்டாக கொண்டு செல்ல கோவை விவசாயப் பல்கலைக்கழகமும், இக்ரிசாட்டும் சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது. அப்படியென்ன மதுரை மல்லியில் விசேஷம் என்கிறீர்களா? தூக்கும் வாசனை, அதிகநாட்கள் கெடாமல் இருப்பது, கனமான இதழ்கள். அப்புறம் என்ன வேணும் மதுரை மல்லி உலக பிராண்டாக வருவதற்கு? மல்லிகைச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சரியான குளிர்பதனக்கிடங்குகளும் இருக்குமெனில் மதுரை மல்லி இன்னும் மணக்கும் என்பது அங்குள்ள உற்பத்தியாளர்களின் கோரிக்கை. நிறைவேறுமா? அடுத்த முறை மதுரை சென்று வரும் போது உங்கள் மனைவிக்கும் மறக்காமல் ஒரு முழும் மல்லிகைப்பூ வாங்கிச் செல்லுங்கள். கல்யாணம் ஆகாதவர்கள் காதலிக்கு வாங்கிச் செல்லுங்கள். 

Friday, March 16, 2012

இந்த வர இணையதளம் 


இரண்டு கல்லூரி பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம். இதை ஒரு வழிகாட்டி இணையதளம் என்று கூறினால் மிகையாகாது. மார்க்கெட்டிங், விற்பனை, சந்தை உருவாக்க போன்றவைகளுக்கு உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் இணையதளம். 

கேள்வி பதில்
கேள்வி
சாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா?

பதில்
ஏன் முடியாது? 50 ஐயிட்டங்கள் வரை இறக்குமதி வரி கட்டாமல் இறக்குமதி செய்யலாம்.


Thursday, March 15, 2012

கொய்யாபழம் ஏற்றுமதி

கொய்யாபழத்தில் பல வகைகள் உண்டு. இந்தியாவில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படுவது அலகாபாத் சபேதா, சர்தார், லலித், அனகாபள்ளி, பனாரசி, ஆர்கா மிருதுலா, நாக்பூர் சீட்லெஸ் போன்றவையாகும். இவற்றில் அலகாபாத் சபேதா, சர்தார் ஆகியவை மிகவும் அதிகம் அளவில் பயிரிடப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட கொய்யாபழம், சாறு ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. சென்ற வருடம் சுமார் 20 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. அதிகம் ஏற்றுமதியாகும் நாடுகள் அரபு நாடுகள், நெதர்லாந்து, யு.கே., இந்தோனேஷியா ஆகியவை ஆகும். 

கார்மெண்ட் ஈடெயிலிங்

கார்மெண்ட் ஈடெயிலிங் என்றால் என்ன? அதாவது கடைகள் வைத்து டிஸபிளே செய்து வியாபாரம் செய்வதை விட இண்டர்நெட் மூலமாக ஆடைகளின் படங்களையும், அளவுகளையும் வெளியிட்டு மக்களை அதன் மூலமாகவே வாங்கச் செய்வது ஈடெய்லிங் எனப்படும். சமீபகாலமாக இந்தத் துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த சந்தை 2105ம் வருடம் சுமார் 6000 கோடி ரூபாய் அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சயம் நூற்றுக்கணக்கான ஈடெய்லிங் இணையதளங்கள் வந்துவிட்டாலும் பிலிப்கார்ட், லெட்ஸ்பை, பேஷன் அண்டு யூ, ஏபி, ஸ்நாப்டீல் ஆகியவை அதிகம் பிரபலமானவை.

Monday, March 12, 2012

அர்ஜென்டினாவில் புதிய இறக்குமதி விதி

அர்ஜென்டினாவில் புதிதாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இறக்குமதி செய்வதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுத் தான் இறக்குமதி செய்யமுடியும் என்று. இது முன்பே காண்டிராக்ட் போட்டவர்களுக்கும், சரக்குகளை தயார் செய்து வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதனால் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் நாட்டின் பிரபலமான லோகோ, அந்த நாட்டின் பிரபலமான கம்பெனிகளின் லோகோ போன்றவைகளை போட்டு சரக்குகள் தயார் செய்து வைத்திருப்பவர்களின் பாடு இன்னும் திண்டாட்டம் தான். தற்போது இந்திய அரசாங்கத்தின் மூலம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் இந்த கஷ்டங்களை எடுத்துக் கூற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.