Wednesday, March 23, 2016

அக்ரி எக்ஸ்போர்ட்சில் எது முண்ணனி வகிக்கிறது?



அக்ரி எக்ஸ்போர்ட்சில் எது முண்ணனி வகிக்கிறது?

அக்ரி எக்ஸ்போர்ட்சில் எந்த பொருள் முண்ணனி வகிக்கிறது என்று கேட்டால் பாசுமதி அரிசி என்று பலரும் கூறி விடுவர். ஆனால் தற்போது மாட்டிறைச்சி (எருமை) அதற்கு போட்டியாக வந்து கொண்டிருக்கிறது. மும்பையைச் சார்ந்த இரண்டு நிறுவனங்கள் இந்த ஏற்றுமதியில் போட்டி போடுகின்றன. அல்லானா சன்ஸ் என்ற மும்பையைச் சார்ந்த நிறுவனம் 146 வருட பழைமையானது. இந்த நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் இறைச்சி ஏற்றுமதியாளர் ஆகும். இதை தொடர்ந்து வரும் கம்பெனி அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகும். இவர்கள் பிராண்ட்கள் இந்தியாவிலும் சக்கை போடு போடுகின்றன.
(ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com
ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com)

Tuesday, March 22, 2016

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

பல நாடுகளில் உள்ள காய்கறிபழங்கள் விலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கேட்கின்றனர். எப்படி பேக்கிங் இருக்கும்அந்த நாடுகளில் விலைகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது தவிர பழங்கள்காய்கறிகள் பற்றிய பல தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இணையதளம். சென்று பாருங்கள் உங்கள் ஏற்றுமதிக்கு உதவியாக இருக்கும்.

(ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com



Monday, March 21, 2016

பால் பொருட்கள் ஏற்றுமதி


பால் பொருட்கள் ஏற்றுமதி
ஒரு காலத்தில் நம் உள்நாட்டுத் தேவைகளுக்கே பால் உற்பத்தி செய்ய முடியாமல் தவித்தோம். அதன் பிறகு வெண்மைப் புரட்சி ஏற்பட்டு இந்தியாவிற்கு போதுமான பால் உற்பத்தி செய்யத் தொடங்கினோம். அந்த வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் கேரளாவின் குரியன் ஆவார். இவர் சமீபத்தில் காலமானார். அவர் குஜராத்தில் வித்திட்ட அமுல் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் வருடத்திற்கு சுமார் 550 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இன்று வளர்ந்திருக்கிறது.

Sunday, March 20, 2016

வீட்டை அலுவலகமாக உபயோகிக்கலாமா? இல்லை அலுவலகத்துக்கு என்று தனி இடம் பிடிக்க வேண்டுமா?

கேள்வி பதில்
ரகுபதி
சேலம்

கேள்வி
வீட்டை அலுவலகமாக உபயோகிக்கலாமாஇல்லை அலுவலகத்துக்கு என்று தனி இடம் பிடிக்க வேண்டுமா?

பதில்
வீட்டை அலுவலகமாக தாராளமாக உபயோகிக்கலாம். தனி இடம் பிடிக்க தேவையில்லை. பின்னர் உங்கள் பிசினஸ் பெரிதானவுடன் தனி இடம் பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அலுவலகம் என்று போர்டு போடும் போது எலக்டிரிசிட்டி பில் போன்றவை அலுவலகத்திற்கான கட்டண விகிதத்தில் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Monday, February 8, 2016

ஏற்றுமதி சரக்குகளை தபால் மூலம் அல்லது கூரியர் மூலம் அனுப்ப முடியுமா?


சரவணன்
கோவை

கேள்வி

ஏற்றுமதி சரக்குகளை தபால் மூலம் அல்லது கூரியர் மூலம் அனுப்ப முடியுமா?

பதில்

தாராளமாக அனுப்பலாம். இந்திய அரசின் இந்தியா போஸ்ட் மூலம் இண்டர்நேஷனல் போஸ்ட் பார்சல் மூலம் அனுப்பலாம். அல்லது தனியார் கூரியர் (டி.எச்.எல்.போன்றவை) மூலம் அனுப்பலாம். இவைகளும் இந்திய கஸ்டம்ஸை கடந்து தான் செல்ல வேண்டும். இவைகள் மூலம் சரக்குகள் அனுப்பும் போது அவை நேரடியாக இறக்குமதியாளரைச் சென்றடையும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது சரக்குகளை பெற்றுக் கொண்டு பணம் தராமல் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. முன் பணம் அதாவது அட்வான்ஸ் பேமண்ட் வாங்கிக் கொண்டு இந்த வகை ஏற்றுமதி செய்வது நல்லது.

மஹாராஷ்டிராவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?


ராமசேஷன்
மும்பை

கேள்வி
மஹாராஷ்டிராவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?

பதில்
பெரிய வெங்காயம்திராட்சைஒயின்மலர்கள்ஸ்டிராபெரிமாதுளம்பழம்இஞ்சினியரிங் பொருட்கள்கெமிக்கல்ஸ்தங்க ஆபரணங்கள்வைர ஆபரணங்கள்துணி வகைகள் ஆகியவை பெருமளவில் ஏற்றுமதி ஆகின்றன. மஹாராஷ்டிராவிலிருந்து பெரும்பாலும் எல்லாப் பொருட்களும் ஏற்றுமதியானாலும் மேலே கண்ட பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.

Sunday, February 7, 2016

பங்களாதேஷில் இருந்து கித்தான் சாக்குகள்இறக்குமதி செய்ய விரும்புகின்றேன்.

பல்லடம் வாசகர்

கேள்வி
பங்களாதேஷில் இருந்து கித்தான் சாக்குகள்இறக்குமதி செய்ய விரும்புகின்றேன். அதற்கு எவ்வளவு டுயூட்டி வரும் என்று எப்படி கண்டுபிடிப்பது?

பதில்
இறக்குமதிக்கான டுயூட்டிகளை தெரிந்து கொள்ளwww.ieport.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள். முழு விபரங்களும் கிடைக்கும். இது தவிர இன்னும் பல இணையதளங்களிலும் கிடைக்கிறது.