Sunday, June 24, 2012

இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு


இந்திய மாம்பழம் அமெரிக்காவிற்கு

மாம்பழ சீசன் முடியப்போகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாம்பழங்களின் கதைகள் இன்னும் நின்றபாடில்லை. 
அமெரிக்காவிற்கு செல்லும் மாம்பழங்கள் இராடியேஷன் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முன்பே பார்த்தோம். அப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்று சான்றிதழ் அளிக்க அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் இந்தியா வந்து 21 நாட்கள் தங்கி அளித்து சென்றிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க டாலர்கள் 85000 செலவு ஆகியுள்ளது. இது மாம்பழம் விலையைக் கூட்டும் அல்லது லாபத்தை குறைக்கும். ஆதலால் அமெரிக்க அதிகாரிகள் வரவேண்டாம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனிப்பான மாம்பழத்திற்குள் இவ்வளவு செய்திகள்.


கொசுறாக ஒரு செய்தி இந்தியாவில் தற்போது குஜராத்தில் ஆண்டு முழுவதும் மாம்பழம் உற்பத்தி செய்யும் முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். மாம்பழ சீசன் என்று ஏங்கி கொண்டு இனி இருக்க வேண்டாம். ஆப்பிள் போல ஆண்டு முழுவதும் சாப்பிடலாம், அப்படியே சாப்பிடலாம். இது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஒரு கசப்பான செய்தி.

Friday, June 22, 2012

பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு


பழங்கள் கெடாமல் இருக்க - பழங்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்கு 

உலகளவில் அதிகம் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், வாழை, மாம்பழம் இன்னும் சில பழங்கள் ஆகியவை உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், உற்பத்தி செய்யும் பழங்களில் சுமார் 40 சதவீதம் விற்பனைக்கு செல்லும் முன்பே அழுகிவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நமது கோவை வேளான் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்ததன் பலன், இன்னும் சில வருடங்களில் நமக்கு உதவும். கனடாவின் கயல்ப் யுனிவர்சிட்டியும் கண்டுபிடித்த ஹெக்சானேல் என்று ஒருவித கெமிக்கலும், கோவை வேளான் பல்கலைக்கழக விஞ்ஞானி கண்டுபிடித்த நானோ பிலிமும் இணைந்து பாக்கிங் செய்து அனுப்பும் போது பழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது. இது 30 சதவீதம் பழங்கள் கெடாமல் இருக்க வழிவகை செய்கிறது. இது நமது ஏற்றுமதிக்கு பெரிதும் உதவும்.

Thursday, June 21, 2012

இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம்


இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம்

இந்தியா, இந்தோனேஷியா வர்த்தகம் தற்போது வருடத்திற்கு 20 பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது சுமார் 110,000 கோடி ரூபாய்கள். இது 2015ம் வருடத்தில் 45 பில்லியன் டாலராக கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (சுமார் 252,000 கோடி ரூபாய்கள்). 
மேலும், 2020ம் வருடத்தில் இந்தோனேஷியாவில் அதிக அளவு முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா முதலாவதாக இருக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? வர்த்தகத்திற்கு ஏற்ற நாடு என்று. இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதியானாலும், இறக்குமதி அதிக அளவில் நிலக்கரி, கச்சா பாமாயில், வெட்டப்பட்ட மரம், ரப்பர், பர்னிச்சர் ஆகியவை செய்யப்படுகிறது. 

Monday, June 18, 2012

ஏற்றுமதிக்கு விளம்பரம் தேவையா


விளம்பரம் என்றால் ஏற்றுமதிக்கு விளம்பரம் தேவையா 

அந்தக் காலத்திலேயே விளம்பரம் மூலம் உலகப் புகழ்பெற்றவர் என்றால் பழநி டாக்டர் காளிமுத்துவை கூறலாம். அப்படி விளம்பரம் செய்வார். அதைப் பார்த்து கூட்டமும் அள்ளி வரும். அதுபோல எந்தப் பொருளை நீங்கள் விற்க வேண்டும் என்றாலும் ஒரு சிறிய அளவிலாவது விளம்பரம் தேவை. அது ஈமெயில் மார்க்கெட்டிங்காக இருக்கலாம், பேப்பர் விளம்பரமாக இருக்கலாம், ரேடியோ விளம்பரமாக இருக்கலாம், டிவி விளம்பரமாக இருக்கலாம். ஏன் துண்டு பிட்நோட்டீசாக கூட இருக்கலாம். ஆனால், உங்கள் பொருள் சரியான முறைப்படி விளம்பரம் செய்யப்படவேண்டும். அப்போது தான் செல்ல வேண்டியவர்களை சரியானபடி சென்றடையும். எங்கு புறப்பட்டு விட்டீர்கள்.. விளம்பரம் செய்யவா?

இந்திய மாம்பழங்கள் அமெரிக்காவில்



இந்திய மாம்பழங்கள் அமெரிக்காவில் 

ஏதாவது ஒரு புதிய பொருளை மார்க்கெட்டில் விற்க முயலும் போது சாம்பிள் கொடுத்து டேஸட் பார்க்கச் சொல்வார்கள். அது போல இந்திய பெரிய பழங்கள் ஏற்றுமதியாளரான கேபி எக்ஸ்போர்ட்ஸ்  இந்திய மாம்பழங்களை அமெரிக்காவில் விற்க அங்கு வாஷிங்டனில் நடைபெறும் சம்மர் பேன்சி உணவுக் கண்காட்சியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சியில் அபிடா ஒரு ஸ்டால் போட்டுள்ளது. அதில் இந்திய மாம்பழங்களை வைத்து அங்கு சுவைத்துப் பார்க்க எல்லோருக்கும் கொடுக்கவுள்ளார்கள். இது ஒரு மார்க்கெட்டிங் உத்தி தான்.

Friday, June 15, 2012

குல்பி ஐஸ்கீரீம் ஏற்றுமதி செய்ய முடியுமா? கோழிக்கறி ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி

குல்பி ஐஸ்கீரீம் ஏற்றுமதி செய்ய முடியுமா?
கோழிக்கறி ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில் 

இது போன்ற கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.

ஏற்றுமதி செய்ய இயலும் எவ்வளவு முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால் 50,000 முதல் 100,000 ரூபாய் வரை என்று பதில் வரும்.

அதாவது இங்கிருந்து ஐஸ்கீரீமை சிறிய அளவில் ஏற்றுமதி செய்ய நினைக்கும் போது அங்கு வாங்குவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள். மேலும் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாக செல்லுமா (சிறிய அளவில் ஏற்றுமதி செய்யும் போது), அதாவது உருகாமல் செல்லுமா? மேலும் நீங்கள் சிறிய அளவில் செய்வதால் வெளிநாடுகளிலிருந்து உங்களிடம் சரக்குகள் வாங்குபவர்கள் நீங்கள் சுத்தமான தண்ணீரை உபயோகப்படுத்தியுள்ளீர்களா என்ற யோசனையும் வரும்.

இது போன்ற கோழிக்கறியும் கெடாமல் அனுப்ப வேண்டுமென்றால், அது பெரிய அளவில் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் அனுப்பப்பட வேண்டும். இவையெல்லாம், 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய்க்குள் செய்ய முடியும் ஏற்றுமதிகள் அல்ல.  இவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் பணம் தேவைப்படும். 
 
உங்களுக்கு தெரிந்த, உங்கள் குடும்ப தொழில் சார்ந்த பொருட்களையே சிறிய அளவில் முதலில் ஏற்றுமதி செய்ய நினையுங்கள்.

Thursday, June 14, 2012

அனிமேஷன் சாப்ட்வேர் ஏற்றுமதி


அனிமேஷன் சாப்ட்வேர் ஏற்றுமதி

இந்தியா இந்த துறையில் முன்னேறி வருகிறது. அனிமேஷன், கேமிங், சினிமா, மீடியா, எஜுகேஷன் ஆகிய துறைகளுக்கு கன்ட்ன்ட் டெவலப்மெண்ட் ஆகியவற்றிக்கு அதிகம் ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. சைனா இந்த துறைகளில் 97.8 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், இந்தியா 13.8 பில்லியன் டாலர்கள் மட்டுமே செய்து வருகிறது.