Wednesday, June 13, 2012

ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம்


ஏற்றுமதி இறக்குமதி 
எக்சிம் வங்கியின் 2500 கோடி ரூபாய் திட்டம்

எக்சிம் வங்கி குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 500 மில்லியன் டாலர்கள் அவர்களுக்கு நீண்டகால கடனாக வழங்கப்படும். இது குறுந்தொழில் செய்பவர்கள் தொழிலார்களின் திறன் முன்னேற்றத்திற்கும், டிசைனுக்கும், பாக்கேஜிங் ஆகியவற்றிக்கும் உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும். இது அவர்களின் ஏற்றுமதியை கூட்டுவதற்கு வழி வகுக்கும். 

Tuesday, June 12, 2012

இந்திய டெனிம் ஏற்றுமதி


இந்திய டெனிம் ஏற்றுமதி 

இந்திய டெனிம் துணிகள் ஏற்றுமதி கூடி வருகிறது. சைனாவின் கரன்சியான் யுவானின் மதிப்பு உலக கரன்சிகளுக்கு எதிராக கூடிவருவதாலும், அங்கு வேலையாட்களின் சம்பளங்கள் கூடி வருவதாலும், உலக டெனிம் இறக்குமதியாளர்கள் இந்திய டெனிம்களை அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளார்கள். இருந்தாலும் தற்போதும் உலகளவில் சைனா தான் டெனிம் ஏற்றுமதியில் கொடிகட்டி பறக்கிறது. இந்த வியாபாரத்தில் 5 சதவீதம் அளவு இந்தியாவிற்கு கிடைத்தாலே அதுவே ஒரு பெரிய வியாபார வாய்ப்பாக இருக்கும். இந்தியாவிலிருந்து துணிகளை வாங்கி பங்களாதேஷில் கொடுத்து தைத்து அதி உலகளவில் வியாபாரம் செய்து வருகின்றனர்.  உலகளவில் சைனா 3 பில்லியன் மீட்டர்களும், இந்தியா 1 பில்லியன் மீட்டர்களும், துருக்கி, பாகிஸதான் ஆகிய நாடுகள் தலா 500 மில்லியன் மீட்டர்களும் டெனிம் உற்பத்தி செய்து வருகின்றன.

Monday, June 11, 2012

மாம்பழம் ஏற்றுமதி


மாம்பழம் ஏற்றுமதி 

நாம் முன்பே கூறியிருந்தோம் இந்தியாவிலிருந்து இந்த வருட மாம்பழம் ஏற்றுமதி கூட வாய்ப்பிருக்கிறது என்று. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சில வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவிலேயே மாம்பழம் ஏற்றுமதி செய்து வந்தோம். சென்ற வருடம் 95 டன்கள் வரை ஏற்றுமதி செய்திருந்தோம். இந்த வருடம் இது சுமார் 140 டன்கள் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு மாம்பழம் விமானம் மூலமாகவே பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இராடியேஷன் செய்யப்பட்ட மாம்பழங்களே அங்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வசதி மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் மட்டுமே இருப்பதால் அல்போன்சா, கேசர் போன்ற மாம்பழங்களே பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு மாம்பழங்கள் அமெரிக்க செல்ல வாய்ப்பு குறைவாக இருக்கிறது. ஏன் தமிழ்நாடும் ஒரு இராடியேஷன் சென்டர் அமைக்கக்கூடாது?

இந்தியாவிலிருந்து ஏலக்காய் ஏற்றுமதி


இந்தியாவிலிருந்து ஏலக்காய் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியா நாட்டுக்கு சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் 4 மடங்கு கூடியுள்ளது. சென்ற வருடம் 723 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அது இந்த வருடம்  2968 டன்களாக உயர்ந்திருக்கிறது. அரபு நாடுகளில் விருந்தினர்களுக்கு பேரீச்சம்பழத்துடன், உயர்தரமான ஏலக்காய் சாற்றில் தயாரிக்கப்பட்ட காபியை அளிப்பார்கள். மேலும், அவர்களுடைய தினசரி உணவிலும் அதிக அளவில் வாசனை சாமான்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அங்கு தரமிக்க ஏலக்காய்க்கு நல்ல வரவேற்பு அதிகம். இந்திய ஏலக்காய்களுக்கு அங்கு மதிப்பு அதிகம்.  ஏலக்காய் விற்பவர்கள் சவூதி அரேபியாவில் நல்ல இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டால் வியாபார வாய்ப்புக்கள் பெருகும். மேலும், சவுதியில் உள்ள இந்திய சவூதி வர்த்தக சபை அடிக்கடி வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துகிறது.

Friday, June 8, 2012

ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி

ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி

பல நாடுகளில் மலர் ஏற்றுமதியில் ஆர்கிட் மலர்கள் தாம் பெரும் இடத்தை
பிடித்துள்ளன. குறிப்பாக தைவான் நாட்டை எடுத்துக்கொண்டால், அந்த நாட்டின்
மலர்கள் ஏற்றுமதி 150 மில்லன் டாலரில் 77  சதவிதத்தை ஆர்கிட் மலர்கள்
தாம் எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவிலும் இந்த மலர் வளர்ப்புக்கு நல்ல
வாய்ப்புக்கள் உள்ளது. புனே அருகில் உள்ள தலேகான் என்ற இடத்தில உள்ள மலர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.

Thursday, June 7, 2012

ஏற்றுமதியும் 2013 வருட இலக்கும்

ஏற்றுமதியும் 2013 வருட இலக்கும்

2012 வருட இலக்காக 300  பில்லியன் டாலர் அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.
பல சிரமங்களுக்கிடையே அதை எட்டி விட்டோம். அடுத்த வருட இலக்காக 350
பில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்றுமதி இலக்கு நாடுகள்
கண்டரியப்பட்டுளதால் இந்த இலக்கு எட்டுவது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை
என்று கூறப்படுகிறது. 2012 வருட இறக்குமதி அளவு எவ்வளவு தெரியுமா ?
சுமார் 485  பில்லியன் டாலர்கள். சரி இவ்வளவு இறக்குமதி செய்திருக்கிறோமா
என்று ஆச்சிரியபடுகிறீர்களா? இதில் அதிகம் ஆயில் இறக்குமதி தான்.

Wednesday, June 6, 2012

டாலரும் ரூபாயும்

டாலரும் ரூபாயும்

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்றுமதியலர்களுக்கு லாபம்
என்று பலரும் நினைத்து
கொண்டிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் வெளிநாட்டில்
இருக்கும் இறக்குமதியாளர்கள் ரூபாய் மதிப்பு குறைவதால் உங்களுக்கு நிறைய
லாபம், ஆதலால் சரக்குகளின் விலையில் குறைத்து தாருங்கள் என்று
ஏற்றுமதியாளர்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த டாலர் ரூபாய்
மதிப்பு எவ்வளவு நாள் இருக்கும், எந்த அளவு இருக்கும் என்று அவர்களால்
கணிக்க இயலாததால் ஏற்றுமதியாளர்கள் குழம்பி இருக்கிறார்கள் என்பது தான்
உண்மை.  ஒரு உதாரணம் டாலருக்கு எதிராக ரூபாய் 56 மேல் சென்றது, ஆனால்
தற்போது 55 க்கு அருகில் வந்து நிற்கிறது. இது போன்ற சூழ்நிலையில்
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை சரியாக கணிப்பது என்பது கடினமான
காரியம்