Tuesday, June 5, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி  இணையதளம்


நடுத்தர மற்றும் சிறிய தொழில்களின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இணையதளம். இதன் மூலம் அரசாங்க திட்டங்களையும், சலுகைகள் என்னென்ன என்பது பற்றியும், ஏற்றுமதிக்கு என்ன வகையில் உதவுவார்கள் என்பது பற்றியும், மார்க்கெட்டிங் உதவிகள் பற்றியும், டிரெயினிங் பற்றியும், யார் யார் என்ன பொருட்கள் வாங்க விரும்புகின்றனர் என்பது பற்றியும், டெண்டர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். சென்று பாருங்கள் நல்ல  இணையதளம்.

Sunday, June 3, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்

கேள்விக்கு என்ன பதில்

சுப்பிரமணியன்
சென்னை


கேள்வி
ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் அதிகமா?

பதில்
இந்தியாவில் இன்னும் வளர்ச்சி பெற சில ஆண்டுகள் ஆகும். ஆனால் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். குண்டூசி முதல் பிரிட்ஜ் வரை, புத்தகம் முதல் டி.வி. வரை வாங்கலாம். விலை கடையை விட குறைவாகக் கிடைக்கிறது. தற்போது பல கம்பெனிகள் போட்டி போட்டு ஆன்லைன் வியாபரங்களை துவங்கி வருகின்றன. பிலிப்கார்ட் என்ற நிறுவனம் சக்கைபோடு போட்டு வருகிறது. ஆனால் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சிலர் கூட்டாக சேர்ந்து தங்களுக்கு பிடித்த பொருட்களை வியாபாரம் செய்ய ஏற்ற தொழில் இது. காய்கறி கூட செய்கிறார்கள் சிலர்.

உற்பத்தி கூடுதலால் குண்டு மிளகாய் விலை வீழ்ச்சி


உற்பத்தி கூடுதலால் குண்டு மிளகாய் விலை வீழ்ச்சி

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்ட குண்டு மிளகாய்க்கு ஒரு மதிப்பு எப்போதும் உண்டு. ஆந்திரா சம்பா மிளகாய் வரத்து அதிகரிப்பால், இளையான்குடி குண்டு மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைக்கிராமத்தில், 4,000 ஹெக்டேரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், சூராணம், ஆனந்தூர் பகுதியிலும் குண்டு மிளகாய் விளைகிறது. மிளகாய் வத்தலாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
இந்த ஆண்டு குண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரம், ஆந்திராவிலும் சம்பா மிளகாய் வரத்து அதிகரித்துள்ளதால், 

கடந்த ஆண்டு கிலோ, 70 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கு விற்ற மிளகாய், இந்த ஆண்டு கிலோ, 55 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்கிறது. 

Friday, June 1, 2012

ஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்


ஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் பகுதியில், பனியன் துணிகளால் ஆன கையுறைகள் அதிக அளவில் தயாரிக்கப் டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பனியன் செய்தது போக, கழிவு பனியன் துணிகளை கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள குறு தொழிற்சாலைகளில் கையுறைகள் செய்யப்படுகின்றன.

இவற்றை ஓசூர் மற்றும் பெங்களூரிலுள்ள மருந்து, கைகடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு கையுறையை பயன்படுத்துவதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான கையுறைகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இருந்து மட்டும் மாதத்துக்கு, இரண்டு லட்சம் கையுறைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதத்துக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கையுறைகள் பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கையுறைக்கு ஓசூர் மட்டுமன்றி, பெங்களூரு, புனே உள்ளிட்ட தொழிற் நகரங்களில் வரவேற்பு உள்ளதால், நாளுக்கு நாள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறப்பான ஏற்றுமதிக்கு வாய்ப்பும் உள்ளது. 

Thursday, May 31, 2012

ஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி


ஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி 


சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், சென்ற நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, 1,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருத்திருக்கிறது. இந்திய ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகளால் ஐரோப்பிய நாடுகளில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கான தேவை குறைந்து போயுள்ளது. 

இருப்பினும், தென் அமெரிக்கா மற்றும் புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள ஒரு சில நாடுகளுக்கு இவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,300 கோடி டாலராக (65 ஆயிரம் கோடி ரூபாய்) இருக்கிறது.  

டெனிம் துணி வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, அதிகளவில் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

Wednesday, May 30, 2012

ஏற்றுமதி கேள்வி பதில் 


ஏற்றுமதி கேள்வி பதில் 


ராமசாமி
கரூர்

கேள்வி

வங்கி கியாரண்டிக்கும், ஸ்டாண்ட் பை லெட்டர் ஆப் கிரிடிட்க்கும் (எஸ.பி.எல்.சி.,) என்ன வித்தியாசம்? 

பதில்

பெரிய வித்தியாசங்கள் இரண்டுக்கும் அதிகம் இல்லை. கியாரண்டி என்ற பதம் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்படுவது இல்லை. குறிப்பாக அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில். ஆகவே அங்கெல்லாம் ஸ்டாண்ட் பை லெட்டர் ஆப் கிரிடிட்க்கும் 
(எஸ் .பி.எல்.சி.,) உபயோகப்படுத்தப்படுகிறது. கியாரண்டிக்கு உள்ள அகில உலக ரூல்கள் தனி, அதாவது யூனிபார்ம் ரூல்ஸ்  பார் கியாரண்டியின் கீழ் வரும். ஸ்டாண்ட் பை லெட்டர் ஆப் கிரிடிட்க்கும் (எஸ்.பி.எல்.சி.,), இண்டர்நேஷனல் ஸ்டாண்ட் பை பிராக்டிஸ்  98ன் கீழ் வரும். 

Tuesday, May 29, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி இணையதளம் 


பேஷன் உலகத்தை உங்களுக்கு அருகில் காட்டும் இன்னொரு இணையதளம். தற்போதைய பேஷன்கள் என்னென்ன?, அந்தத் துறையில் வேலை வாய்ப்புக்கள், புதிய டிரண்ட்கள், ஈ மார்க்கெட்டிங் என்று பேஷன் துறையை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் ஒரு இணையதளம். பேஷன் துறையில் இருப்பவர்கள் தினசரி சென்று பார்க்க வேண்டிய இணையதளம்.