Tuesday, May 29, 2012

பங்களாதேஷிலிருந்து இறக்குமதிக்கு பூடான் தடை, இந்தியாவிற்கு லாபம்


பங்களாதேஷிலிருந்து இறக்குமதிக்கு பூடான் தடை, இந்தியாவிற்கு லாபம்

பங்களாதேஷிலிருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்ய பூடான் தடை செய்துள்ளது. இதில் ஜுஸ்  மற்றும் எனர்ஜி டிரிங் ஆகியவைகளும் அடங்கும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு தடை இல்லை. ஆதலால் இந்தப் பொருட்கள் இந்தியாவிலிருந்து செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. முயற்சி செய்யுங்கள்.

Monday, May 28, 2012

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடி


வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடி


கடந்த 2011-12ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என அபெடா தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி சுமார் 43500 கோடி ரூபாயாக இருந்தது. வேளாண் பொருட்கள் பிரிவில், பழங்கள், காய்கறிகள், பாசுமதி அரிசி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. 

மலர்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், பயிறு வகைகள், மூலிகை மருந்துகள், மூலிகை தாவரங்கள், கொத்தவரை உள்ளிட்ட 14 வகை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்திருக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, May 20, 2012

ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க்

ஏற்றுமதி உலகம் ப்ளாக் ரேங்க் 

இந்த ப்ளாக் யை தொடங்கும்போது தமிழ்மணம் இணையதளத்தில் ரேங்க் 1450 ஆக இருந்தது. கிட்டதட்ட 10 மாதத்தில் 800 ரேங்க் குறைந்து தற்போது 643 என்ற அளவில் இருக்கிறது. இது வாசகர்கள் இந்த ப்ளாக்குக்கு கொடுக்கும் வரவேற்பு. தங்கள் ஆதரவுக்கு நன்றி.  

அன்புடன் சேதுராமன் சாத்தப்பன், மும்பை 

மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்


மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்

உலகளவில், வரும் 2013ம் ஆண்டு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், நியாயமான விலையில், தரமான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.அவற்றின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா, தரமான மாட்டிறைச்சியை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், அடுத்த ஆண்டில், இந்தியா, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. 

Saturday, May 19, 2012

விலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு


விலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு

மஞ்சள் விலை வீழ்ச்சியால், அதன் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் மஞ்சள் உற்பத்தியில், இந்தியா 78 சதவீதம் பெற்று  முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து சீனா (8 சதவீதம்), மியான்மர் (4 சதவீதம்), நைஜீரியா (3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (3 சதவீதம்) ஆகியவை உள்ளன.

இந்நிலையில், சென்ற ஆண்டில் மஞ்சள் விலை 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. தற்போது, ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு கிலோ மஞ்சள் 33-34 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 167-170 ரூபாயாக இருந்தது.

மஞ்சள் விலை குறைந்ததால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்திய மஞ்சளுக்கு மிகப் பெரிய சந்தையாக ஐக்கிய அரபு எமிரேட் விளங்குகிறது. அடுத்த இடங்களில் மலேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

மஞ்சள் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்திய மஞ்சளில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட "கர்குமின்' என்ற பொருள்தான் அதன் விலையை நிர்ணயிக்கிறது. இந்திய மஞ்சளில் இது அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாகவே, சர்வதேசச் சந்தையில் இந்திய மஞ்சளுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

Wednesday, May 16, 2012

ரோஜா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி


ரோஜா உற்பத்தி  மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சி


ஆசியாவில் அதிகமான ரோஜா மலர் சாகுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் திறந்த வெளியிலும், பசுமை கிடங்கு முறையிலும் விவசாயிகள், 5,000 ஹெக்டேரில் ஆண்டு முழுவதும் ரோஜா மலர் சாகுபடி செய்கின்றனர்.

ஓசூர் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால், ரோஜா உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ரோஜாவின் தரம் குறைந்ததால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. 

பசுமை கிடங்குகளில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. திறந்த வெளியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், உள்ளூர் பண்டிகைகள், முகூர்த்த நிகழ்ச்சிகளை குறி வைத்து வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தற்போது செடிகளில் உற்பத்தியாகும் பூக்கள் தரமற்றதாக உள்ளன.அதனால், தற்போது ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாட்டு ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது. உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமே தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த காலத்தில், காம்புடன் கூடிய ஒரு மலர் 45 முதல் 50 செ.மீ., வரை இருந்தது. தற்போது பூக்கள் சிறுத்தும், காம்பு கட்டையாகவும் இருக்கிறது. அதனால், தற்போது முற்றிலும் வெளிநாட்டு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 

Tuesday, May 15, 2012

இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக மவுசு


இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக மவுசு

இந்திய வெங்காயத்திற்கு வங்கதேசத்தில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த ஆன்டில் நிதியாண்டில், இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொண்ட நாடுகளில், வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 1,742 கோடி ரூபாய் மதிப்பிற்கான வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இதில், வங்கதேசத்திற்கு 572 கோடி ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவிற்கு (463 கோடி ரூபாய்), இலங்கைக்கு (176 கோடி ரூபாய்), ஐக்கிய அரபு எமிரேட் (166 கோடி ரூபாய்), இந்தோனேசியா (90 கோடி ரூபாய்), பாகிஸ்தான் (54 கோடி ரூபாய்), சிங்கப்பூர் (29 கோடி ரூபாய்), நேபாளம் (25 கோடி ரூபாய்), ஓமன் (23 கோடி ரூபாய்) மற்றும் வியட்னாம் (21 கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.