Sunday, July 29, 2018

திருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் மாதம்  9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படிஎன்ற ஒரு நாள் கருத்தரங்கு சேதுராமன் சாத்தப்பன் அவர்களால் திருச்சி, சத்திரம் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில்  நடக்கவிருக்கிறது.

இந்த கருத்தரங்கு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு
புதிய தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர், ஏற்றுமதியாளர்களுக்கு பயன் அளிக்கும்.

புதிய தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் பலர் விரும்புகின்றனர். எனினும், அவர்களில் பலர் தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் தெரியாததால் தயங்கும் நிலை உள்ளது.

இந்த கருத்தரங்கில், பிரபல வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் பயிற்சி அளிக்கிறார். கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவுடன்ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி?, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி? ஆகிய புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0986 961 6533 என்ற எண்ணில் பேசலாம்.

மும்பையை சேர்ந்த இன்ஸ்டிடியூட் பார் லர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. பிரபல நாளிதழ் தினமலர், திருச்சி  ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.


Saturday, February 24, 2018

திருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் மாதம்  9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?  என்ற ஒரு நாள் கருத்தரங்கு சேதுராமன் சாத்தப்பன் அவர்களால் திருச்சி, சத்திரம் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில்  நடக்கவிருக்கிறது.

இந்த கருத்தரங்கு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு
புதிய தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர், ஏற்றுமதியாளர்களுக்கு பயன் அளிக்கும்.

புதிய தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் பலர் விரும்புகின்றனர். எனினும், அவர்களில் பலர் தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் தெரியாததால் தயங்கும் நிலை உள்ளது.

இந்த கருத்தரங்கில், பிரபல வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் பயிற்சி அளிக்கிறார். கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவுடன், ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி?, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி? ஆகிய புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0986 961 6533 என்ற எண்ணில் பேசலாம்.

மும்பையை சேர்ந்த இன்ஸ்டிடியூட் பார் லர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. பிரபல நாளிதழ் தினமலர், திருச்சி  ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.

Saturday, October 8, 2016

ஏற்றுமதி டாக்குமெண்டேஷன் சந்தேகங்களா? புதிய ப்ளாக்

வாசகர்களுக்கு வணக்கம்,

ஏற்றுமதி டாக்குமெண்டேஷன் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை ஒரு தனி ப்ளாக்கில் கொண்டு வந்தால் அது ஏற்றுமதியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எனக் கருதி தனியாக கொண்டு வந்திருக்கிறேன். படித்து  பயன் பெறுங்கள்.

www.exportdocumentationdoubts.blogspot.com


அன்புடன்

சேதுராமன் சாத்தப்பன், மும்பை

sethuraman.sathappan@gmail.com
098 204 51259

Friday, August 12, 2016

இந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்?

இஸ்மாயில்
சென்னை


கேள்வி

இந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்?

கேள்வி

என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று சொல்லுவது எளிது. பெரும்பாலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும். எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாலிசி, ஹாண்ட்புக் ஆப் எக்ஸ்போர்ட் இம்போர்ட் புரசீசர்ஸ் ஆகிய புத்தகங்கள் உங்களுக்கு உதவும். இந்த புத்தகங்கள் இணயதளத்திலும் கிடைக்கின்றன.

Saturday, July 30, 2016

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஏற்றுமதி செமினார் கோவையில்

வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி?
மற்றும்
ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?

இனிய தமிழில் கோவையில் ஒருநாள் கருத்தரங்கு 

மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை

ஆகஸ்ட் 28 ஞாயிறன்று கோவை, பீளமேடு, பி.எஸ்.ஜி. கல்லூரி அரங்கில் நடக்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 098696 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருந்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு ஏற்றுமதி பற்றி எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில், சேதுராமன் சாத்தப்பன் எழுதிய 3 தமிழ் புத்தகங்கள், மதிய உணவு வழங்கப்படும். இந்த கருத்தரங்கை மும்பையில் இயங்கும் முன்னணி தமிழ் வழி ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான இன்டிடியூட் பார் லேர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் நடத்துகிறது.

தினமலர் மற்றும் கோவை விஜயா பதிப்பகம் இந்த நிகழ்வில் இணைந்துள்ளன.


மேலும் விவரங்களுக்கு கணேசன் 098696 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, March 27, 2016

ரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது?தெரிந்து கொள்வது?

கேள்வி
ரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது?தெரிந்து கொள்வது?

பதில்

ரிசர்வ் வங்கியின் சர்க்குலர்களை அவர்களின் வெப்சைட்டில் சென்று பார்க்க முடியும். அதாவது www.rbi.org.in என்ற இணையதளத்தில் சென்று notifications என்ற பிரிவுக்கு சென்று சர்க்குலர்களை பார்க்கலாம். 2106ம் வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி மாஸ்டர் சர்க்குலர் வெளியிடுவதில்லை. தற்போது மாஸ்டர் டைரக்ஷன்ஸ் தான் வெளியிடுகிறார்கள். தினசரி வெளியிடும் சர்க்குலர்களை சேர்த்து வருடந்தோறும் ஜனவரி   தேதியில் மாஸ்டர் டைரக்ஷன் என வெளியிடுகிறார்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். இது சப்ஜெக்ட் வாரியாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியும் இதில் அடங்கும். சென்று பாருங்கள் உபயோகமான தகவல்கள் அடங்கிய இணையதளம்.
ஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com


சவூதிக்கு அரிசி


சவூதிக்கு அரிசி


சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகம் அரிசி இறக்குமதி செய்கின்றன. சவூதி அரேபியா நாடு இறக்குமதி செய்யும் அரிசியில் 63 சதவீதம் இந்தியாவிலிருந்து தான் செய்கிறது. பெரும்பாலும் பாசுமதி அரிசி தான் இறக்குமதி செய்யப்பட்டாலும், சாதாரண அரிசியும் சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சவூதி அரேபியா நாட்டில் வருடத்திற்கு ஒரு தனி நபர் 43 கிலோ அரிசியை உணவாக சாப்பிடுகின்றார். ஆதலால் அங்கு தேவை அதிகமாக இருக்கிறது.


தங்களின் சந்தேகங்களுக்கு

ஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com

மொபைல் 098 204 51259, www.sethuramansathappan.blogspot.com.