Pages

Sunday, July 19, 2015

இந்திய டீ ஏற்றுமதி

இந்திய டீ ஏற்றுமதி


இந்திய டீக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு.ஆனால் தற்போது ஏற்றுமதி சரக்குகளில் தரம் குறைவாக இருபக்கிறது என்று வெளிநாடுகளிலிருந்து செய்திகள் வருவதால் இனிமேல் ஏற்றுமதிக்கு முன்பு ராண்டம் சாம்பிளிங் செய்து சரக்குகளின்  பார்த்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் தரம் குறித்து கவலையடைய வேண்டாம்.

ரெகுலராக ஏற்றுமதி செய்பவர்கள்ஏற்றுமதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவும், எப்போதாவது ஏற்றுமதிசெய்பவர்கள் ஏற்றுமதிக்கு 10 நாட்களுக்கு முன்பும் தங்கள் ஏற்றுமதி பற்றிய விபரங்களை டீ போர்ட் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ராண்டமாக ஒரு சில அப்ளிகேஷன்களை எடுத்து அதன் சரக்குகளை சாம்பிளிங் செய்வார்கள்.

2012-13 ம் வருடம் இந்தியா 220 மில்லியன் கிலோக்கள் டீத்தூள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 4000 கோடி ரூபாய்கள் ஆகும். அதே சமயம் 18 மில்லியன் கிலோக்கள் இறக்குமதி செய்துள்ளது. கென்யா தான் உலகத்திலேயே மிக குறைந்த விலைக்கு டீத்தூள் விற்பனை செய்கிறது.

No comments:

Post a Comment