Pages

Wednesday, February 26, 2014

ஏற்றுமதி கேள்வி பதில்

ஏற்றுமதி கேள்வி பதில்

ராஜாராமன்
திருச்சி

கேள்வி
ஏற்றுமதி டாக்குமெண்ட் அனுப்பும் போது எத்தனை இன்வாய்ஸ் அனுப்ப வேண்டும்?

பதில்
எத்தனை டாக்குமெண்ட் இறக்குமதியாளர் கேட்கிறாராரோ அத்தனை அனுப்ப வேண்டும்அப்படி அவர் ஏதும் கேட்கவில்லை என்றால் நீங்கள் மினிமம் ஒன்று கூட அனுப்பலாம்.


கேள்வி
எங்கள் கம்பெனிக்கு பல நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கின்றன.வெளிநாடுகளில் இருக்கும் எங்களது தொழிற்சாலைகளிலிருந்து உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்து இங்கு விற்கலாம் என்று நினைக்கிறோம்அப்படி இறக்குதி செய்யும் போது அவற்றிக்கு வரிவிலக்கு அல்லது குறைந்த இறக்குமதி வரி கிடைக்குமா?

பதில்
இவ்வகை இறக்குமதியும் சாதாரண இறக்குமதி என்ற வகையில் தான் எடுத்துக் கொள்ளப்படும்ஆதலால்இப்படி இறக்குமதி செய்யும் போது எந்தவிதமான இறக்குமதி வரிவிலக்கோ அல்லது குறைந்த இறக்குமதி வரி சலுகைகளோ கிடைக்காது.

No comments:

Post a Comment