Pages

Sunday, April 15, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி
தாமோதரன்
டைரக்டர், கிரேட்

நாங்கள் திருச்சியில் கிரேட் என்ற பெயரில் ஒரு பெண்கள் சுய உதவிக்குழு வைத்துள்ளோம். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உதவியுடனும், தஞ்சாவூர் பயிர் பதனப்படுத்தும் நிலையம் உதவியுடனும் வாழைப்பூ தொக்கு   தயார் செய்து வருகிறோம். இதை தற்போது தமிழ்நாடு அளவில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். ஐ.ஈ.சி. கோடு எடுக்க விரும்புகின்றோம். என்ன செய்வது?

பதில்

வாழ்த்துக்கள். ஐ.ஈ.சி. கோடு வாங்குவது எளிது. உங்களது நிறுவனம் பெயரில் வங்கியில் ஒரு கரண்ட் அக்கவுண்ட் இருக்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் என்ன ரிஜிஜ்டிரேஷன்கள் தேவையோ அவையும் வேண்டும் (TIN, SHG registration போன்றவை). இவையெல்லாம் இருந்தால்  http://zjdgft.tn.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்றால் ஐ.ஈ.சி. கோடு வாங்குவதற்கான அப்ளிகேஷன் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் பெயர் ஆயத் நிரயத் பார்ம் ANF2A என்று பெயர். இன்னும் பல இணையதளங்களிலும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கும். முழு விபரங்களுக்கு இந்த இணையத்தளத்தையும் பார்க்கலாம்http://www.eximguru.com/iec-code/default.aspx

திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இருப்பதால், வாழைப்பூ தொக்கு தவிர மற்ற வாழை சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபடுங்கள். மேலும் உங்கள் ஏற்றுமதிப் பொருட்களுக்கென ஒரு இணையதளம் ஆரம்பியுங்கள். நிச்சியம் வெற்றியைத் தரும், ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உண்டு. என்னுடைய ஆதரவு / உதவியும் எப்போதும் உண்டு.



No comments:

Post a Comment