Friday, February 24, 2017

சென்னையில் ஏப்ரல் 23ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி கருத்தரங்கு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு

சென்னையில் ஏப்ரல் 23ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி கருத்தரங்கு
தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு



புதிய தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர், ஏற்றுமதியாளர்களுக்கு பயன் தரும் வகையில் சென்னையில் ஏப்ரல் 23ம் தேதி ஞாயிறன்று தமிழில் ஏற்றுமதி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் பலர் விரும்புகின்றனர். எனினும், அவர்களில் பலர், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் தெரியாததால் தயங்கும் நிலை உள்ளது.

அத்தைகைய தயக்கத்தை போக்கவும், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் உதவும் வகையில், எளிய தமிழில், ஏற்றுமதி தொழில் குறித்த கருத்தரங்கத்திற்கு, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  
சென்னை ராயப்பேட்டை, இந்தியன் ஆபீசர்ஸ் அசோஷியேஷன் ஏ.சி. ஹாலில் வரும் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்த கருத்தரங்கில், பிரபல வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் பயிற்சி அளிக்கிறார். கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவுடன், வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி?, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி? ஆகிய புத்தகங்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0986 961 6533 என்ற எண்ணில்  பேசலாம்.

மும்பையை சேர்ந்த இன்ஸ்டிடியூட் பார் லர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. பிரபல நாளிதழ் தினமலர் இதற்கு விளம்பர  ஒத்துழைப்பு வழங்குகிறது.


No comments:

Post a Comment